/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'அரைக்கால் சட்டையோடு கொடி பிடித்தவன்' திடீரென பதவிக்கு வரவில்லை: எம்.எல்.ஏ., ஆதங்கம்

ADDED : ஜூலை 08, 2025 12:16 AM
விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிப்பட்டு பகுதியில், தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். இதில், தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன். நான் ஏதோ திடீரென எம்.எல்.ஏ., பதவிக்கு வந்துவிட்டதாக எண்ண வேண்டாம்.
எனது கட்சிப்பணிகள், 60, 65 வயது மூத்த கட்சியினருக்கு நன்கு தெரியும். தற்போது உள்ள இளைஞர்கள் சிலருக்கு பழைய வரலாறு தெரியாமல் இருக்கலாம். நான் அரைக்கால் டிரவுசர் போட்ட காலத்தில் இருந்து, தி.மு.க., கொடியை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி, பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்பதை கட்சியின் முன்னோடிகள் நன்கு அறிவார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தொகுதி பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்படும். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன்' என்றார்.