/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவரிங் நகையை அடகு வைத்தவர் மீண்டும் வந்தபோது சிக்கினார்
/
கவரிங் நகையை அடகு வைத்தவர் மீண்டும் வந்தபோது சிக்கினார்
கவரிங் நகையை அடகு வைத்தவர் மீண்டும் வந்தபோது சிக்கினார்
கவரிங் நகையை அடகு வைத்தவர் மீண்டும் வந்தபோது சிக்கினார்
ADDED : ஜூலை 19, 2025 03:09 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கவரிங் நகையை அடகு வைத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 44; இவர், காணையில் நகை அடகு கடை வைத்துள்ளார். அரசூர் அடுத்த ஆனத்துாரைச் சேர்ந்தவர் சுதாகர், 39; கூலித் தொழிலாளி.
கடந்த 3ம் தேதி அடகு கடையிலிருந்த சந்திரசேகரன் மனைவி சுபவள்ளியிடம், சுதாகர் 4 கிராம் செயினை அடகு வைத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார்.
அதன் பிறகு கடைக்கு வந்த சந்திரசேகர், நகையை பரிசோதித்தபோது, அது கவரிங் எனவும், தவறான விலாசத்தை கொடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து, சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சுதாகர் நேற்று காலை மீண்டும் 2 கிராம் கவரிங் நகையுடன் அடகு வைக்க முயன்றார்.
உடன், சந்திரசேகரன், காணை போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், சுதாகரை கையும், களவுமாக பிடித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.