/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நல பணியாளர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
/
மக்கள் நல பணியாளர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
ADDED : பிப் 15, 2024 11:45 PM
விக்கிரவாண்டி : முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்னை சென்ற மக்கள் நலப் பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும். இறந்த ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூபாய் 5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை மனுவை சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொடுக்க மக்கள் நலப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜராஜசோழன், ஒன்றிய தலைவர்கள் திருநாவலுார் வெங்கடேசன், தியாகதுருகம் முருகன், அண்ணா கிராமம் குமார், நாங்குநேரி பாலகிருஷ்ணன் உட்பட 88 பேர் 4 வேன்களின் நேற்று காலை சென்னை சென்றனர்.
விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை அனைவரையும் திருப்பி அனுப்பினர்.