/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்
ADDED : மே 27, 2025 12:43 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் வீணாகி வருகிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் மரங்கள் சூழ்ந்த பசுமையான சூழலில் உள்ளது. மரங்களுக்கு நடுவில் ஒரு குளமும் உள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு வெளிபகுதியில் உள்ள வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக குளத்திற்குள் விடப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வளாக குளம் கழிவுநீர் குட்டை போல மாறிவிட்டது.
குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்ள், தெர்மாகோல், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை மிதக்கிறது.
தற்போது குளத்தில் தண்ணீர் இருப்பது தெரியாதபடி செடிகள் வளர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்து, குளத்தை சுத்தம் செய்து சீரமைக்க உத்தரவிட்டார்.
ஆனால் குளத்தை துார்வாரி கழிவுநீர் வராமல் தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குளத்தில் தேங்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக குளத்தின் நிலையை கண்டு முகம் சுழித்து செல்கின்றனர்.