/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்
/
கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்
கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்
கனமழையை எதிர்கொள்ள மீட்புக் குழுவினர் தயார்! காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அலர்ட்
ADDED : அக் 14, 2024 09:48 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து இரு தினங்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனையொட்டி, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறிப்பாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் நேற்று பேரிடர் தடுப்பு உபகரணங்களுடன் தயாராகினர்.
தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் யமுனாராணி தலைமையில், நேற்று காலை தீ தடுப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார்படுத்தி வைத்தனர். 4 தீயணைப்பு வாகனங்கள், மரம் வெட்டும் கருவிகள், கட்டட இடிபாடுகளை அகற்றும் கருவிகள் என மீட்புக் கருவிகள், ஜெனரேட்டர், மின் விளக்குகள், ரப்பர் போட்டுகள், மிதவை உபகரணங்கள், பாம்பு பிடி உபகரணங்களை தயார்படுத்தினர்.
மீட்பு பணிகளில் ஈடுபட முன்னணி வீரர்கள் ஷாஜகான், பிரபு தலைமையில் 44 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
இதே போல், திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லுார், கோட்டக்குப்பம் உள்ளிட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் குழுவினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
காவல் துறை சார்பில் எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில், மரக்காணம், கிளியனுார், வானுார், ஆரோவில், திண்டிவனம் உள்ளிட்ட கடலோர பகுதி காவல் நிலையங்களில், போலீசார் மீட்பு உபகரணங்கள், ரப்பர் போட்டுகள், மிதவை கருவிகள், முதலுதவி கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இதே போல், பிற காவல் நிலையங்களிலும், மீட்பு படையினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள 40 காவல் நிலையங்களிலும், போலீஸ் குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.