/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்
/
ஆற்றில் மூழ்கிய விவசாயி தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 09, 2024 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது மகன் சுதேஷுடன்,14; நிலத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பினார்.
சங்கராபரணி ஆற்றை கடந்தபோது, ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ காப்பாற்றினர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்புபடை நிலையத்தினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்தை தேடும் ணியில் ஈடுபட்டனர். மாலை 6:00 மணிக்குப்பின் இருட்டி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.