/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சோதனைச்சாவடியில் பிடிபடும் 'சரக்கு' பாட்டில்கள் மாயமாகும் ரகசியம்
/
சோதனைச்சாவடியில் பிடிபடும் 'சரக்கு' பாட்டில்கள் மாயமாகும் ரகசியம்
சோதனைச்சாவடியில் பிடிபடும் 'சரக்கு' பாட்டில்கள் மாயமாகும் ரகசியம்
சோதனைச்சாவடியில் பிடிபடும் 'சரக்கு' பாட்டில்கள் மாயமாகும் ரகசியம்
ADDED : நவ 12, 2024 06:19 AM
விழுப்புரம் அருகே சோதனைச் சாவடியில் பிடிபடும் சரக்குகள் கணக்கில் வராததால் மதுவிலக்கு பிரிவு போலீசார் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிமாநில மதுபானங்கள் மட்டுமின்றி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துவோரை கண்காணித்து பிடிக்கும் பணிகளில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுபானம் கடத்துவோரை பிடிப்பதற்காக ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, அங்கு போலீசார் வாகனங்களை சோதனை செய்து, மதுபாட்டில்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்து, கொண்டு செல்வோர் மீது வழக்கு போடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள், இந்த எல்லைக்குள் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இதில், புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் பஸ்களில் பலர் பேக்குகளில் வைத்து கொண்டு மதுபாட்டில்களை கொண்டு செல்கின்றனர். இந்த மதுபாட்டில்களை, கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி போலீசார், பறிமுதல் செய்து, கொண்டு செல்வோர் மீது வழக்குப் பதிகின்றனர். இந்த விபரங்கள், விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் தெரிவித்தாலும், பறிமுதலாகும் மதுபாட்டில்கள் அவர்களிடம் சரியாக சென்று சேருவதில்லை.
இந்த மதுவிலக்கு பிரிவு போலீசார், வழக்கு போட்டாலும், கணக்கில் சரக்கு பாட்டில்களை நீதிமன்றத்தில் காட்ட வழியின்றி உள்ளனர். சோதனைச் சாவடி போலீசாரிடம் கேட்டால், சரியான பதில் கூறுவதும் இல்லை. இதனால், மதுவிலக்கு போலீசார் கோர்ட்டில் மது பாட்டில்கள் கணக்கை காட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.