/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : மே 06, 2025 05:14 AM

செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் பாரம்பரிய தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு நேற்று காலை கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது.
காலை 9:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், கொடி மரத்திற்கு கலசாபிஷேகமும் செய்தனர். 10:00 மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனை நடந்தது.
இதில் கமலக்கண்ணியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு சாமி வீதி உலா, வாண வேடிக்கை, மேடை நாடகம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து நடக்க உள்ளது. இம்மாதம் 13ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 2.30 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது.