/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பால் பரபரப்பு
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பால் பரபரப்பு
ADDED : பிப் 26, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை வி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி விஜயலட்சுமி, 35; இவர், தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று மாலை அந்த ஸ்கூட்டரில் திடீரென பாம்பு புகுந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அதனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விரட்ட முயன்றார்.
தகவல் அறிந்த தீயணைப்பு அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அந்த ஸ்கூட்டியில் புகுந்திருந்த 4 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

