/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்
ADDED : ஜூன் 05, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; ப.வில்லியனுார் பிடாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் பாலாலயம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரில் உள்ள திரவுபதி அம்மன், பிடாரி அம்மன் கோவில், இந்தாண்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று பாலாலயம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு திரவுபதி அம்மன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு பாலாலயமும், சிறப்பு ஹோமமும் நடந்தது. மூலவர் திரவுபதி அம்மன், பிடாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.