/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திருடிய ஆசாமி கைது 25 சவரன் நகை மீட்பு
/
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திருடிய ஆசாமி கைது 25 சவரன் நகை மீட்பு
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திருடிய ஆசாமி கைது 25 சவரன் நகை மீட்பு
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திருடிய ஆசாமி கைது 25 சவரன் நகை மீட்பு
ADDED : ஜூன் 16, 2025 12:41 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பா.ஜ., பிரமுகர் வீட்டில் நகை திருடிய நபரை போலீசார் கைது செய்து, நகையை கைப்பற்றினர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி, 50; பா.ஜ., ஒன்றிய தலைவர். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றனர்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கண்டமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையின் போது கைது செய்யப்பட்ட நபரின் கை ரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது முண்டியம்பாக்கம் பா.ஜ., தலைவர் ரவி வீட்டில் திருடிய போது பதிவான நபரின் கைரேகையுடன் பொருத்தமாக இருந்தது.
இதை எடுத்து மாவட்ட எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி .,சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செந்தில் முருகன் தலைமையிலான குழுவினர், வழுதரெட்டி காமன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ்குமார், 37; கைது செய்து அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
சந்தோஷ்குமார் இதுபோன்று நகைகளை திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வருபவர் என தெரிய வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நகைகளை கண்டுபிடித்த போலீசாரை எஸ்.பி., பாராட்டினார்.