நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் 87வது ஆண்டு விழா, விளையாட்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு, பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.
கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். இலக்கிய பேச்சாளர் சுகிசிவம் சிறப்புரையாற்றினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் சான்றிதழ் வழங்கினார். உதவி பேராசிரியர் வள்ளி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

