
விழுப்புரம்: தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, மகளிர் தின கேடயம் பெறும் ஆசிரியர்களுக்கான பாராட்டு ஆகிய முப்பெரும் விழா தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் நடந்தது. மாநில துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருமூர்த்தி வரவேற்றார். மாநில துணை செயலாளர் ஜெயவேல், துணை தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் செல்லையா, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில், அரசு ஊழியர்களக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். அகவிலைபடி உயர்வை உடனே வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முன் தேதியிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பொருளாளர் குணசேகர் நன்றி கூறினார்.