/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வித்தியாச விநாயகர் ஓவிய ஆசிரியை அசத்தல்
/
வித்தியாச விநாயகர் ஓவிய ஆசிரியை அசத்தல்
ADDED : ஆக 27, 2025 07:08 AM

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரத்தில் ஓவிய ஆசிரியை வித்தியாசமாக ஓவியம் தீட்டி அசத்தியுள்ளார்.
விழுப்புரம் அருகே பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தா அன்புசிவம், 41; ஓவிய ஆசிரியை. இவர், கடந்த 15 ஆண்டுகளாக வித்தியாசமான ஓவியங்களை தீட்டி வருகிறார்.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை யொட்டி, வித்தியாசமாக 'லிபான்' ஓவியம் தீட்டியுள்ளார்.
இந்த விநாயகரை அவர், களிமண் மூலம் பெயிண்டிங் செய்து, கார்ட்போர்டு பயன்படுத்தி 150 ஸ்டோன்கள் மூலம் வடிவமைத்துள்ளார். இதில், விநாயகரை வழிபட பயன்படுத்தும் மாம்பழம், வாழை, ஆப்பிளை பயன்படுத்தியுள்ளார்.
ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தி இந்த லிபான் விநாயகரை அவர் தீட்டியுள்ளார்.
அதே போல், இவரிடம் பயிற்சி பெறும் 5ம் வகுப்பு மாணவி ஓவியா,10; அதே லிபான் ஓவியத்தில் விநாயகரை தீட்டி அசத்தியுள்ளார். இவர், 50 ஸ்டோன்களை பயன்படுத்தி விநாயகரை தீட்டியுள்ளார்.