/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் சென்னை திரும்பின
/
பொங்கல் விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் சென்னை திரும்பின
பொங்கல் விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் சென்னை திரும்பின
பொங்கல் விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் சென்னை திரும்பின
ADDED : ஜன 22, 2024 06:22 AM

விக்கிரவாண்டி : பொங்கல் விடுமுறை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பியதால் டோல்கேட்டில் வாகனபோக்குவரத்து அதிகரித்தது.
சென்னை பகுதிகளில் வசித்த தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பொங்கல் விடுமுறையைக் கொண்டாட சென்றனர்.
இதனால், கடந்த 12ம் தேதி முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன.
பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் கடந்த 16ம் தேதி முதல்வாகனங்கள் சென்னைக்கு திரும்ப துவங்கின. 18ம் தேதி வரை ஒரு லட்சம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்தன.
இந்நிலையில், சிலர் வார இறுதி வரை தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் விடுமுறையை நீடித்து சொந்த ஊரில் தங்கியவர்கள், வார இறுதி நாளான நேற்று சென்னை திரும்பினர்.
மேலும், நேற்று முகூர்த்த நாள் என்பதாலும், சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் திரும்பியதாலும் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 4:00 மணி முதல் டோல் கேட்டில் வாகன போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கியது.
இதனால் டோல்கேட்டில் சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களிலும் வாகனங்களை அனுமதித்தனர்.
மாலை 6:00 மணி வரை 36 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவு வரை 45 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கிச் சென்றன.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.