/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேரங்கியூரில் ஆற்று திருவிழா ஏனாதிமங்கலம் கிராம மக்கள் ஏமாற்றம்
/
பேரங்கியூரில் ஆற்று திருவிழா ஏனாதிமங்கலம் கிராம மக்கள் ஏமாற்றம்
பேரங்கியூரில் ஆற்று திருவிழா ஏனாதிமங்கலம் கிராம மக்கள் ஏமாற்றம்
பேரங்கியூரில் ஆற்று திருவிழா ஏனாதிமங்கலம் கிராம மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 19, 2025 06:43 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் 5 இடங்களில் ஆற்று திருவிழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை நிறைவு நாளான நேற்று ஆற்று திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி, விழுப்புரம் அடுத்த பேரங்கியூர், தென்பெண்ணை ஆற்றில் நடந்த விழாவில் திருவெண்ணெய்நல்லுார், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பங்கேற்றனர்.
பரிக்கல், மேல்தணியாலம்பட்டு, ஆனத்துார், கரடிப்பாக்கம் உள்ளிட்ட கோவில்களில் இருந்து உற்சவர்களுக்கு ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
கிராம மக்கள் ஏமாற்றம்
ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் தற்போது அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை.
தீர்த்தவாரிக்கு கொண்டு வரப்பட்ட உற்சவர் சுவாமிகளை மட்டும் போலீஸ் மற்றும் வருவாய்துறையினர் அனுமதித்தனர். இதனால், ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருந்து வந்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.