/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வைகுண்டவாசருக்கு திருக்கல்யாணம்
/
வைகுண்டவாசருக்கு திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 29, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  ஆடிப்பூர உற்சவத்தையொட்டி, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது. இதையொட்டி, பெருமாள், ஆண்டாள் சுவாமிகளுக்கு திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

