/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் இருந்து இறங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி
/
ரயிலில் இருந்து இறங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி
ரயிலில் இருந்து இறங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி
ரயிலில் இருந்து இறங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி
ADDED : அக் 09, 2024 06:44 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில் நிற்கும் முன்னரே, அதிலிருந்து இறங்கிய பெண், சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
விழுப்புத்திலிருந்து தாம்பரம் செல்லும் பாசஞ்சர் ரயில் நேற்று மாலை 4:30 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையம் 3 பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது, ரயில் நிற்கும் முன்னரே, ரயில்வே போலீசை பார்த்து கீழே இறங்க முயற்சித்த மாற்றுத் திறனாளி பெண் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே விழுந்து, சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
போலீஸ் விசாரணையில், இறந்த பெண் தாம்பரம், இரும்புலியூர், கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகள் நிர்மலாதேவி, 32; அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அன்பு, 44; என்பவருடன் தாம்பரத்திலிருந்து டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால், போலீசைப் பார்த்து பயந்து இறங்க முயன்றபோது விழுந்து இறந்தது தெரியவந்தது.
ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

