ADDED : பிப் 04, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் மனைவி கோமதி, 21; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
கடந்த மாதம் 29ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கோமதி இரவு 11:00 மணியளவில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
படுகாயமடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று மாலை இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.