நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் கிருஷ்ணவேணி, 19; நர்சிங் படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 8ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

