ADDED : டிச 07, 2024 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடையில் சுவற்றை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மோகன்தாஸ், சேல்ஸ் மேன்கள் அருணாசலம், ராமகிருஷ்ணன் ஆகியோர்,நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு கடையைத் திறந்தபோது கடையில் இரண்டு பக்கங்களிலும் சுவர் உடைக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கத்தில் உடைக்கப்பட்ட சுவற்றின் துளையின் வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 13 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
சூப்பர்வைசர் மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.