/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு
/
ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு
ADDED : ஜன 19, 2024 11:09 PM
விழுப்புரம், -விழுப்புரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் புகுந்து திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன், 35; விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், பொங்கல் விழா கொண்டாடுவதற்காக கடந்த 15ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான, விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்திற்கு சென்றார்.
பொங்கல் விழா முடிந்து நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளேபீரோவில் இருந்த ஒரு சவரன் நகை, 3,000 ரூபாய், எல்.இ.டி., 'டி.வி' குக்கர், மிக்சி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.