/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
/
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
ADDED : ஏப் 26, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் :விழுப்புரம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடு போனது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த காணையில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூஜை முடிந்து நேற்று முன்தினம் இரவு பூசாரி வீரமணி பூட்டிவிட்டு சென்றார்.
தொடர்ந்து, நேற்று காலை கோவிலுக்கு சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடுபோனது தெரிந்தது.
தகவலறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இக்கோவிலில், கடந்த மாதம் உண்டியல் உடைத்து திருடு போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.