/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருட்டு
/
அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருட்டு
ADDED : டிச 08, 2024 05:17 AM
திண்டிவனம், : அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை திருட்டு குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், பெரியகாலப்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் மனைவி சத்யா, 37; இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வந்துள்ளார்.
அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் முன் உடன் வந்திருந்த அவரது தாயாரான செல்வியிடம் 5 சவரன் நகையை கழற்றி கொடுத்துள்ளார். அவரது தாயார் நகை இருந்த பையை அங்குள்ள கட்டிலில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்த போது, நகை இருந்த பையை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரோஷணை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் இருந்தும், நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்களின் மொபைல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து திருடு போவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.