/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் அருகே கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
/
திண்டிவனம் அருகே கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
திண்டிவனம் அருகே கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
திண்டிவனம் அருகே கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : மார் 18, 2024 06:00 AM
திண்டிவனம், :  திண்டிவனம் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தில், குளக்கரை அருகே எழில் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி குப்புசாமி,72; நேற்று இரவு 7:00 மணியளவில் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கோவிலுக்குள் அம்மனுக்கு அணிவித்திருந்த 750 கிராம் எடையுள்ள வெள்ளி கவசம் மற்றும் 750 கிராம் எடையுள்ள வெள்ளி சூலம் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இதுகுறித்து கோவில் பூசாரி குப்புசாமி போலீசில் புகார் தெரிவித்தார்.
மேலும், அதே ஊரில் உள்ள அம்மச்சாரம்மன் கோவில், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களிலும், பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.
இச்சம்பவங்கள் குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

