/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் தெப்பல் உற்சவம்
/
அவலுார்பேட்டையில் தெப்பல் உற்சவம்
ADDED : ஏப் 15, 2025 04:46 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை பங்குனி உத்திர விழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.
அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவில் பங்குனி உத்தர விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவின் தெப்பல் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
இரவு வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மலை அடிவார குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். முன்னதாக இன்னிசை கச்சேர நடந்தது. விழாவை துவக்கி வைத்த மஸ்தான் எம்.எல். ஏ.,வுக்கு, விழா குழு சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் வெள்ளி வால் நினைவுப் பரிசாக வழங்கினார்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ் செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், துணை தலைவர் சரோஜா அய்யப்பன், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், அறங்காவலர்கர்கள் லதா முரளி, விவேகானந்தன், வார்டு உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் திருமலை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.