/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பகுதியில் டவுன் பஸ் இயக்கமில்லை விடியாமல் போன விடியல் பயண திட்டம்
/
செஞ்சி பகுதியில் டவுன் பஸ் இயக்கமில்லை விடியாமல் போன விடியல் பயண திட்டம்
செஞ்சி பகுதியில் டவுன் பஸ் இயக்கமில்லை விடியாமல் போன விடியல் பயண திட்டம்
செஞ்சி பகுதியில் டவுன் பஸ் இயக்கமில்லை விடியாமல் போன விடியல் பயண திட்டம்
ADDED : ஆக 12, 2025 02:44 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக செஞ்சி உள்ளது. செஞ்சி நகரிலும் சுற்று வட்டார பகுதியிலும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன.
செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் பணி நிமித்தமாக வருகின்றனர்.
இதுபோன்று கிராமங்களில் இருந்து பணிக்கு வரும் பெண்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செல்ல விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தில் பெண்கள் பயனடைய எல்லா பகுதிக்கும் டவுன் பஸ் சேவை அவசியம்.
செஞ்சிக்கு வேலைக்கு வரும் பெண்களில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள கிராமங்களில் ஏராளமான பெண்கள் வேலைக்கு வருகின்ற னர். இவர்கள் செஞ்சிக்கு வருதற்கும் பணி முடிந்து திரும்பிச் செல்வதற்கும் போதிய டவுன் பஸ்கள் இல்லை.
திருவண்ணாமலை மார்க்கத்தில் கீழ்பென்னாத்துாரில் இருந்தும், விழுப்புரம் மார்க்கத்தில் கஞ்சனுாரில் இருந்தும் டவுன் பஸ் சேவையை துவங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இதில் அக்கறை காட்ட வில்லை.
இந்த மார்க்கத்தில் இருந்து செஞ்சிக்கு வேலைக்கு வரும் பெண்கள் விடியல் திட்டத்தில் முழு அளவில் பயனடைய முடியாத நிலை உள்ளது.
எனவே கீழ்பென்னாத்துார், கஞ்சனுாரில் இருந்து செஞ்சிக்கு டவுன் பஸ் சேவையை துவக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.