/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
/
திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED : ஜூன் 25, 2025 01:20 AM

திண்டிவனம் :திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள திரவுபதி அம்மன் உடனுறை தருமராஜா கோவிலில், தீமதி திருவிழா கடந்த மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 21ம் தேதி உற்சவ விழாவில்,மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். 22ம் தேதி இரவு நடந்த தீமிதி திருவிழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணி மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் செய்திருந்தனர்.