/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி அரசு பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' இதழ் வினாடி வினா
/
விக்கிரவாண்டி அரசு பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' இதழ் வினாடி வினா
விக்கிரவாண்டி அரசு பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' இதழ் வினாடி வினா
விக்கிரவாண்டி அரசு பள்ளியில் 'தினமலர் -- பட்டம்' இதழ் வினாடி வினா
ADDED : ஜன 04, 2024 03:36 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' இதழ் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து பதில் சொல் அமெரிக்கா செல் வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை டெய்சி ராணி வரவேற்றார்.
போட்டியில் 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில் 16 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி வினாடி போட்டி நடந்தது. போட்டியில் 9ம் வகுப்பு மாணவர்கள் செந்தமிழரசன், பிரவீன் குழு முதலிடத்தையும், 12ம் வகுப்பு மேகலா, ரஞ்சிதா குழு இரண்டாமிடத்தையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் பதக்கம், கேடயம் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். போட்டியில் பங்கு பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.