/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல்
/
பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல்
ADDED : பிப் 16, 2025 03:10 AM

திண்டிவனம் : திண்டிவனம் ரோஷணை தாய்தமிழ் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் திறனறிவு போட்டி நடந்தது.
மருத்துவர் சுந்தர் கல்விப் பணிக்குழு சார்பில் திண்டிவனம் நகரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் அனைத்து நிலை மாணவர்கள் 303 பேர் பங்கேற்ற திருக்குறள் ஒப்புவித்தல் திறனறிவு போட்டி நேற்று நடந்தது.
விழாவிற்கு, ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மருத்துவர் சுந்தர் வரவேற்றார். பள்ளி தாளாளர் பூபால் முன்னிலை வகித்தார். திண்டிவனம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் துரைஇராசமாணிக்கம், பலராமன், மரிய அந்தோணி, தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் பிரபாகல்விமணி, காமராசர் ஆகியோர் பேசினர்.
திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திறனறிவு போட்டியில் 20 நடுவர்கள் மதிப்பீடு செய்து தேர்வு செய்தனர். இவர்களுக்கான பரிசளிப்பு பாராட்டு விழா வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது.

