/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்குறள் பேரவை பரிசளிப்பு விழா
/
திருக்குறள் பேரவை பரிசளிப்பு விழா
ADDED : ஜன 17, 2025 06:40 AM

செஞ்சி: செஞ்சி திருக்குறள் பேரவை சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
செஞ்சி திருக்குறள் பேரவையின் 40வது ஆண்டு மூன்று நாள் இலக்கிய பெருவிழா 14ம் தேதி துவங்கியது. நேற்று 4வது நாள் நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
அச்சக உரிமையாளர் சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். சங்க தலைவர் கோபிநாத், ஆதில்பாஷா, சிவநாதன், சையத்உஸ்மான் முன்னிலை வகித்தனர். நாடார் சங்க கவுரவத்தலைவர் பால்ராஜ் குமார் வரவேற்றார். காரைக்குடி ராகவேந்திரன் கருத்துரை வழங்கினார்.
ரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி திருக்குறளால் திருவள்ளுவர் படம் வரைந்த மாணவிக்கும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரி பால் புரஸ்கார் விருது பெற்ற மாணவி சிந்துராஜா மற்றும் வட்ட அளவில் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இணை செயலாளர் வாசு கார்த்திகேயன் நன்றி கூறினார்.