/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்குறள் வரிகளில் திருவள்ளுவர் ஓவியம்: மாணவிக்கு சைக்கிள் பரிசு
/
திருக்குறள் வரிகளில் திருவள்ளுவர் ஓவியம்: மாணவிக்கு சைக்கிள் பரிசு
திருக்குறள் வரிகளில் திருவள்ளுவர் ஓவியம்: மாணவிக்கு சைக்கிள் பரிசு
திருக்குறள் வரிகளில் திருவள்ளுவர் ஓவியம்: மாணவிக்கு சைக்கிள் பரிசு
ADDED : டிச 22, 2024 07:34 AM

செஞ்சி : திருக்குறளில் திருவள்ளுவரின் ஓவியம் வரைந்த அரசு பள்ளி மாணவியை பாராட்டி செஞ்சி பேரூராட்சி தலைவர் சைக்கிள் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கினார்.
மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
செஞ்சி அடுத்த மேல்களவாய் அரசு நடுநிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி பிரதிஷா, 12; இவர் 1330 திருக்குறளில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்துள்ளார். பெஞ்சல் புயலின் போது கிடைத்த விடுமுறையில் 5 நாட்களில் இந்த ஓவியத்தை வரைந்திருந்தார்.
அனைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இந்த ஓவியம் இடம் பிடித்துள்ளது. இந்த மாணவிக்கு நேற்று செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி சைக்கிள், கை கடிகாரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள், வட்டார கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். கிராம பொது மக்கள் சார்பில் பாராட்டு பத்திரம் வழங்கினார். ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டினர். நினைவு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும், கிராம பொது மக்களும் மாணவியை நேரிலும், வாட்சாப்பிலும் பாராட்டி வருகின்றனர்.