நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
முன்னதாக காலை 9:00 மணிக்கு மூலவர் ராமநாதீஸ்வர், ஞானாம்பிகை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், ஓதுவார் பார்த்திபன் தலைமையில், ஓதுவார் மூர்த்தி, செல்வம் ஆகியோர் முன்னிலையில் முற்றோதல் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் தேவார, திருவாசக பாடல்களைப் பாடினர். ஆறுமுகம், செல்வராஜ், சாந்தவேல், சரவணன் மற்றும் ஓதுவார்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பூஜையைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.