ADDED : ஜூன் 19, 2026 05:15 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரியில் மீன்பிடிக்காமல் இருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த இருவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ், 52; மூர்த்தி, 45; இருவரும் விழுப்புரம், பானாம்பட்டு ஏரியில் மீன் வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஏரியில் மீன்களை இரவு நேரங்களில் பிடித்ததால், நேற்று முன்தினம் நாகராஜ், மூர்த்தி ஆகியோர் பாதுகாப்பிற்காக ஏரியின் அருகே காவலுக்கு இருந்தனர். அப்போது அங்கு ஸ்கூட்டரில் விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்த மணி,27; என்பவர் உள்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் மீன்களை திருட வந்ததை அறிந்த நாகராஜ், மூர்த்தி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது, மணி உள்பட 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் நாகராஜ், மூர்த்தியை தாக்கினர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், மணி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
