/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது
/
நாட்டு வெடி வீசி கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது
ADDED : நவ 28, 2024 03:05 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன், 42. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன், விழுப்புரம் அடுத்த அயனம்பாளையம் கால்நடை பயிற்சி மையம் அருகே மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, சந்தோஷ்குமார், 34, என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
சந்தோஷ்குமார் எடுத்து வந்த நாட்டு வெடிகளை தீ வைத்து, எதிர்தரப்பினர் மீது வீசினார். வெடிகள் வெடித்து சிதறியதில் தரணிதரன் உள்ளிட்ட நால்வருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. தரணிதரன் தரப்பினர் தாக்கியதில், சந்தோஷ்குமார் காயமடைந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.