/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி
/
பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி
பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி
பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய சகோதரர்கள் மூவரும் பலி
ADDED : டிச 24, 2024 08:10 AM
மரக்காணம் : மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்தபோது வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் மூவரும், நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ், 26; இரட்டையர்களான விக்ரம்,24; சூர்யா,24. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்தனர். அப்போது, லோகேஷ் கால்வாயில் தவறிவிழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அண்ணனை காப்பாற்ற முயன்ற விக்ரம், சூர்யாவும் தண்ணீரில் அடித்து செல்லப் பட்டனர். தகவலறிந்த மரக்காணம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில், இரவு முழுவதும் படகில் சென்று தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை 7.00 மணிக்கு கால்வாய் ஓரமுள்ள புதரில் லோகேஷ் சடலத்தை மீட்டனர். அதே பகுதியில் மதியம் 2.50 மணிக்கு விக்ரம் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மீனவர்கள் சுருக்குமடி வலை போட்டு தேடியதில் சூர்யாவின் உடல் சிக்கியது. மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.