/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் கைது
/
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் கைது
ADDED : பிப் 16, 2025 05:20 AM
விழுப்புரம் : கஞ்சா விற்ற வழக்கில் மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் பாகர்ஷா வீதியில் இருசக்கர வாகனங்களோடு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரித்ததில், அவர்கள், விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த பாலகுரு,22; நவீன்,22; வெங்கடேசபுரத்தை சேர்ந்த சச்சின்,19; ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 50 கிராம் கஞ்சா மற்றும் பைக், ஸ்கூட்டர் மற்றும் 4 மொபைல்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தப்பிய விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த யுவன்ராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.