/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருவரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு

ADDED : நவ 26, 2024 07:11 AM

விழுப்புரம்; இருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ஏழுமலை,35; விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இவரின் சகோதரர் முத்துகிருஷ்ணன்,42; என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி, ஏழுமலையும், அதே கிராமத்தை சேர்ந்த இவரின் உறவினர் கண்ணப்பிள்ளை மகன் முருகன்,42; ஆகியோர், அப்பகுதியில் உள்ள தங்களின் நிலத்தில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அங்குவந்த முத்துகிருஷ்ணன், அவரது மகன் தங்கமணி,25; ஆகியோர் ஏழுமலை, முருகனிடம் தகராறு செய்தனர். முத்துகிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் ஏழுமலை, முருகன் ஆகியோர் இறந்தனர். ஏழுமலை மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், முத்துகிருஷ்ணன், தங்கமணி ஆகிய இருவரையும் அனந்தபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
இவ்வழக்கில், குற்றம் சாற்றப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து, நீதிபதி முபாரக் பரூக் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தங்கமணி விடுதலை செய்யப்பட்டார்.