/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 23, 2024 12:03 AM

விழுப்புரம்: திருவக்கரை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவக்கரை ஸ்ரீ வெங்கடாஜலபதி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் காளீஸ்வரன் தலைமையில் துணைச் செயலாளர் கலியன், பொருளாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் 150 பேர், நேற்று மதியம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்துள்ள மனு:
கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி, பின் டிப்பர் லாரி வாங்கி, உரிமையாளர் நிலைக்கு சிரமப்பட்டு வந்துள்ளோம். எங்களின் தொழில் கடந்த மூன்றாண்டுகளாக நலிவடைந்துள்ளது.
ஜல்லி, எம் சாண்ட் விலை தினந்தோறும் உயர்வதால் நாங்கள் கடந்த 17ம் தேதி விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்களிடம் கோரியும் குறைக்கவில்லை. இதனால், நாங்கள் காலவரையற்ற டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வருகிறோம்.
விலை உயர்வை குறைக்க அரசு உதவ வேண்டும். ஓராண்டிற்கு முன்பிருந்த நிலை மற்றும் செயல்பாடு என்ற பழைய விலையை நிர்ணயித்து தொடர்ந்து எங்களுக்கு புளூ மெட்டல்ஸ் சார்ந்த பொருட்கள் மற்றும் எம் சாண்ட் தடையின்றி உரிய பில் மூலம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.