/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.மா.கா., தலைவர் நிவாரணம் வழங்கல்
/
த.மா.கா., தலைவர் நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 07, 2024 08:04 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட த.மா.கா., சார்பில், அய்யூர்அகரம் கிராமத்தில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தைலை ராஜேந்திரன், சீனுவாசன், மாநில செயலர் வளவனுார் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை மாநில தலைவர் வாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் வேல்முருகன், வானுார் முத்து, ஜெயமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் சோழன், கிருஷ்ணராஜ், மாவட்ட நிர்வாகி சதீஷ்குமார், எஸ்.சி., - எஸ்.டி., அணி நடராஜன், மகளிரணி வேல்விழி, வழக்கறிஞர் கபிலன், நகர தலைவர் ஹரிபாபு, மூப்பனார் பேரவை சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.