தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 29, 2026 11:02 PM

ADDED : அக் 29, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:02 PM ADDED : அக் 29, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: த.வெ.க., அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டல தொ.மு.ச., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளர் வேலு வரவேற்றார். பொதுச்செயலாளர் சேகர், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்கம் பொது செயலாளர் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வெற்றிப்பயண பஸ்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு (டிரைவர், கண்டெக்டர்) தினப்படி, வசூல் படியை உயர்த்தி வழங்கிட வேண்டும். தினந்தோறும் டீசல் செலவை ஈடு செய்ய நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, அதை செய்ய தவறியதாக த.வெ.க., அரசை கண்டித்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், துணை தலைவர்கள் ரகுநாதன், அன்பழகன், கோமதுரை, ரவிச்சந்திரன், துணை பொது செயலாளர்கள் மனோகரன், நாகராஜன், சங்கர், தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us