ADDED : செப் 23, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில், த.மா.கா., வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் உறுப்பினர் சேர்த்தல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் முத்தியால், பொதுச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் கருத்துரை வழங்கினர். கட்சி நிர்வாகிகள் ரங்கநாதன், ரவி, வெங்கட்ராவ், திருவேங்கடம், ஆனந்த், அப்துல்லா, செங்கேணி, சதீஷ், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.