/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு
/
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு
ADDED : நவ 08, 2024 11:04 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று தொடங்குகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (டிப்ளமோ, ஐ.டி.ஐ., லெவல்) தேர்வு, இன்று 9ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணிவரையும் மாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரையும் நடக்கிறது.
இதில், தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவுக்கான தேர்வும், இதனையடுத்து 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை கணினி வழித்தேர்வும் நடபெற உள்ளது.
இந்த தேர்வுகள் விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடக்கிறது. இன்று 9ம் தேதி காலை நடைபெறவுள்ள (ஓ.எம்.ஆர்.,) கொள்குறி வகை தேர்வில், 1,224 தேர்வர்களுக்கு 4 தேர்வுக் கூடங்களிலும், பிற்பகல் 563 தேர்வர்களுக்கு 2 தேர்வுக் கூடங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கும் கணினி வழித்தேர்வில் 711 தேர்வர்களுக்கு 4 தேர்வுக் கூடங்களிலும் நடக்கிறது.
இந்த தேர்வு பணி கண்காணிப்புக்கு, தலா ஒரு நடமாடும் குழு அலுவலர் மற்றும் 4 ஆய்வு அலுவலர்கள் மற்றும் கணினி வழி தேர்வு பணிக்கு 4 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.