/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையோரம் வீசி சென்ற பச்சிளம் குழந்தை மீட்பு
/
சாலையோரம் வீசி சென்ற பச்சிளம் குழந்தை மீட்பு
ADDED : ஜூலை 11, 2025 05:32 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே சாலையோரம் வீசிச் சென்ற பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த வி.பூதூர் ஊராட்சியில், கிராம மக்கள் நேற்று தேசிய ஊரக வேலை திட்டப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பூதுார்-குமளம் செல்லும் சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு உடனே மக்கள் சென்று பார்த்தனர். அப்போது சாலையோர வாய்க்காலில் வெள்ளை துணியில் சுற்றிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று அழுதபடி இருந்தது. பிறந்து ஒருசில நாட்களே ஆன நிலையில், அந்த குழந்தையை யாரோ சாலையில் வீசி சென்றது தெரிந்தது.
வளவனுார் போலீசார் விரைந்து சென்று, குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தையை, சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

