/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 16.69 லட்சம் 16.69 லட்சம்; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 16.69 லட்சம் 16.69 லட்சம்; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 16.69 லட்சம் 16.69 லட்சம்; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 16.69 லட்சம் 16.69 லட்சம்; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
ADDED : ஜன 23, 2024 05:31 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று கலெக்டர் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், 16 லட்சத்து 69 ஆயிரத்து 577 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரிதாஸ், ஆர்.டி.ஓ., காஜா சாகுல் ஹமீது, நகராட்சி கமிஷனர் ரமேஷ் உடனிருந்தனர்.
கலெக்டர் பழனி பட்டியலை வெளியிட்டு கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 1.1.2024 தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி, கடந்த 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடந்தது.
அதில், 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பெற்று, தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று இறுதி வாக்காளர் பட்டில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 27.10.2023ல் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 பேர் இருந்தனர்.
இதன் பிறகு திருத்தப் பணிகள் நடந்ததில் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 434 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நடந்த சிறப்பு சுருக்க திருத்தப்பணியில் 32 ஆயிரத்து 179 பேர் சேர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 569, பெண்கள் 8 லட்சத்து 44 ஆயிரத்து 79௬, இதரர் 213 என மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 577 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை 20 ஆயிரம் பேர் வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய வாக்காளர் பட்டியல், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும்.
வாக்காளர்கள் இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும், தங்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் வழங்கலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவல்கள் தேவைப்பட்டால், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண். 1950ஐ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் தி.மு.க., சக்கரை, அ.தி.மு.க., பசுபதி, ராமதாஸ், காங்., செல்வராஜ், பா.ஜ., சுகுமார், தே.மு.தி.க., மணிகண்டன், மா.கம்யூ., சுப்ரமணியன், இந்திய கம்யூ., சவுரிராஜன், பகுஜன் சமாஜ் கலியமூர்த்தி, ஆம் ஆத்மி சுகுமார் பங்கேற்றனர்.

