/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுலா தொழில் முனைவோர் விருது
/
சுற்றுலா தொழில் முனைவோர் விருது
ADDED : செப் 12, 2025 04:05 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர் விருது பெற, விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு :
தமிழக சுற்றுலா துறை, ஆண்டுதோறும் சுற்றுலா தொழில் முனைவோருக்கு, விருது வழங்குகிறது. இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்தும், தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கிறது.
இந்த விருது சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது வரும், 27 ம் தேதி 17 பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை www.tntourismawards.com இணையதளத்தில் பதிவிறக்கி, பூர்த்தி செய்து வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.