/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுலா தல அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகள் குழப்பம்
/
சுற்றுலா தல அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகள் குழப்பம்
சுற்றுலா தல அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகள் குழப்பம்
சுற்றுலா தல அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : அக் 25, 2025 06:58 AM

திண்டிவனம்: சுற்றுலா தலம் மற்றும் கோவில்கள் குறித்த அறிவிப்பு பலகையில் கி.மீ., குறிப்பிட கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டிவனம் - செஞ்சி சாலை வழியாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், கோவில் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், செஞ்சி கோ ட்டை, ஆரோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற இடங்களை குறிப்பிட்டு மெகா சைஸ் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த பலகையில், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் எத்தனை கி.மீ., துாரம் உள்ளன என குறிப்பிடப்படவில்லை.
இதனால், மேல்மலையனுார் கோவில், செஞ்சி கோட்டை, ஆரோவில் ஆகியவற்றிற்கு எவ்வளவு துாரம் பயணிக்க வேண்டும் என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பத்தில் செல்கின்றனர்.
மேலும், அந்த அறிவிப்பு பலகை எந்த துறை சார்பில் வைக்கப்பட்டது என்பதும் அச்சிடப்படவில்லை. அதாவது ஒரு அறிவிப்பு பலகை வைத்தால், அதில் நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலாத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை என அச்சிடப்படும். ஆனால், இந்த பலகைகளில் அப்படி எதுவும் அச்சிடப்படவில்லை. அதனால், இந்த அறிவிப்பு பலகைகளில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் கி.மீ., துாரத்தை அச்சிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

