/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிம்மதி இழந்த சுற்றுலா பயணிகள்; கஞ்சா ஆசாமிகள் அட்டகாசம்
/
நிம்மதி இழந்த சுற்றுலா பயணிகள்; கஞ்சா ஆசாமிகள் அட்டகாசம்
நிம்மதி இழந்த சுற்றுலா பயணிகள்; கஞ்சா ஆசாமிகள் அட்டகாசம்
நிம்மதி இழந்த சுற்றுலா பயணிகள்; கஞ்சா ஆசாமிகள் அட்டகாசம்
ADDED : ஜூலை 15, 2025 06:15 AM
ஆரோவில் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாத்ரி மந்திரியை பார்ப்பதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், அருகில் உள்ள கிராமங்கள் வளர்ச்சி பெற்று வருகிறது. சுற்றுலாபயணிகள் தங்குவதற்கு, ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை, சின்ன முதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கெஸ்ட் அவுஸ்கள் உள்ளன.
இப்பகுதிகளில் கஞ்சா போதையில் வரும் ஆசாமிகள் பைக்கில் வேகமாக சென்று அச்சுறுத்துவதையடுத்து, சாலையில் பைக் ரேஸ் செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் ஆரோவில் சாலையில் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் சில சிறுவர்கள் செல்பி எடுத்து நின்றிருந்ததை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், அதற்குள் ஆசாமிகள் ஓட்டம் பிடித்தனர். கடந்த காலங்களில் கஞ்சா விற்கும் கும்பலை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இதனால் கஞ்சா விற்பனை இலை மறை காய் போல் நடந்தது.
தற்போது, மீண்டும் கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம் தலை துாக்கியுள்ளது. தெருக்களில் செல்வதற்கே சுற்றுலா பணிகளும், பொது மக்களும் அச்சமடைகின்றனர்.
ஆரோவில் பகுதி மட்டுமின்றி, அதைச்சுற்றியுள்ள கிராமங்கள், புதுச்சேரி பகுதியான ஆலங்குப்பம், சஞ்சீவிநகர் பகுதிகளிலும், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கஞ்சா விற்பனையாளர்களின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.