/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
செஞ்சி கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 18, 2024 04:28 AM

செஞ்சி: காணும் பொங்கல் தினமான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் செஞ்சி கோட்டை பகுதி களை கட்டியது.
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி கோட்டைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
காணும் பொங்கல் தினமான நேற்று செஞ்சி கோட்டையை காண விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார், வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. பகல் 2 மணியளவில் கோட்டையின் எல்லா பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நிறைந்திருந்தனர்.
ராஜகிரி கோட்டை தரைப்பகுதியில் உள்ள கல்யாண மகால், நெற்களஞ்சியம், வெங்கட்ரமணர் கோவில், சிவன் கோவில் பூங்கா, கிருஷ்ணகிரி கோட்டையின் மலை உச்சி வரை சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
பூங்காக்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் செஞ்சி கோட்டை களை கட்டியிருந்தது.
டி.எஸ்.பி., கவினா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செஞ்சி கோட்டை பராமரிப்பு அலுவலர் நவீன் தலைமையில் இந்திய தொல்லியல் துறையினர் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்தனர்.