ADDED : டிச 27, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர். ; திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில்  கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் முரளி, துணைச் சேர்மன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாலமுருகன் வரவேற்றார்.
பெஞ்சல்  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

